சுற்றுலாத்துறையின் விளம்பரத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ராவை அசாம் அரசு நியமித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சுற்றுலாவை பிரபலப்படுத்த விளம்பர தூதராக நியமிக்க முதலில் சச்சின் டெண்டுல்கரை அணுகியதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறினார். தொடர்ந்து மேலும் 4 பிரபலங்கள் மறுத்து விட்ட நிலையில், இறுதியில் பிரியங்கா சோப்ரா சம்மதம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். அசாம் மாநில அரசு சுற்றுலாத்துறையின் விளம்பர தூதராக பணியாற்ற அடுத்த இரு ஆண்டுகளுக்கு பிரியங்கா சோப்ராவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவருக்கு எந்த தொகையும் கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா தெரிவித்தார்.