நடிகர் விஜய் சேதுபதி மது அருந்தும் பழக்கத்தை கடை பிடித்து வருவதால், தமிழ் சினிமா உலகம் அவரை கவலையோடு பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அதில் இயல்பான நடிப்பை வழங்கி, தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என விரும்பும் இயக்குனர்கள், விஜய் சேதுபதியை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டிருப்பதாகவும், முன்பெல்லாம் சினிமா படப்பிடிப்புகளின் போது கேரவான் பக்கமே செல்லாத அவர், தற்போது அடிக்கடி கேரவானுக்கு செல்வதாகவும், திரும்பி வரும் போது அவரது கண்கள் சிவந்து காணப்படுவதாகவும், அவரது நடையில் ஒரு மாற்றம் தெரிவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

அவரது வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அவருக்கு இந்த பழக்கத்திற்கு உட்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு ஆளான நடிகர்கள் சினிமா உலகத்திலிருந்து காணாமல் போய்விடுவார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு.

எனவே இந்த பழக்கத்திலிருந்து விஜய் சேதுபதி மீண்டு வர வேண்டும் என தமிழ் சினிமா உலகம் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.