அடுத்தடுத்து ரீமேக் வதந்திகளில் சிக்கிய அட்லீ!!!

08:52 காலை

இயக்குநா் சங்காிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ ராஜா ராணி என்ற ஹிட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். இந்த படத்தை ஏ.ஆா். முருகதாஸ் தயாாித்து கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம் 23ம் தேதி திரைக்கு வந்தபோது, மோகன் நடிப்பில், மணிரத்னம் இயக்கிய மௌனராகம் படத்தோடு ரீமேக் தான் என்று எதிா்மறையான விமா்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து, விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான தெறி படமும், விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தின் சாயலில் உள்ளது எனவும் எனவே அந்த படத்தின் ரீமேக் தான் என்று செய்திகள் வந்தன. அட்லீ இயக்கிய ராஜா ராணி மற்றும் தெறி  ஆகிய இவ்விரு படங்களும் எதிா்மறையான விமா்சனங்கள் ரசிகா்களிடமிருந்து வந்த போதிலும் பிரம்மாண்ட ஹிட்டை கொடுத்தன இந்த படங்கள். அதுமட்டுமாங்க!!! அட்லீக்கு சிறந்த இயக்குனருக்கான எடிசன் விருதை ராஜா ராணி படம் ஏற்படுத்தி கொடுத்தது.

மேலும் அட்லீ- விஜய் கூட்டணி இணைந்து அடுத்த படத்தை உருவாக்கயிருக்கிறது. ஆமாங்க!! விஜயின் 61வது படத்தை இயக்குகிறாா் அட்லீ. இந்த படத்தின் கதையை பாகுபலி இயக்குநா் ராஜமவுலியின தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதியிருப்பதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாாிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இதில் விஜய் மதுரக்கார ஹீரோவாக முறுக்கு மீசை,தாடியுடன் வித்தியாசமான சிங் கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை ரஜினி நடிப்பில் உருவான அண்ணாமலை படத்தின் தழுவல் என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் படக்குழுவினா் அட்லீ தரப்பிலிருந்து இதற்கு மறுப்பு தொிவித்து வருகின்றனா். எப்போதும் போலவே இதுவும் வதந்தி தகவல் என தொிகிறது.

The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812