அடுத்தடுத்து வெளியான புகைப்படங்களால் அஜித் ரசிகர்கள் ஆனந்தம்

அஜித்   என்றாலே ரசிகர்களுக்கு ஸ்பெஷல். அஜித் நடித்து வரும் 57 வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பா நாடுகளில் நடந்து  வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தல அஜித்தின் பைக் ரேஸ் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியது.

இந்த நிலையில்,  உடல் கட்டழகுடன் கேசூவலாக நின்று போஸ் கொடுக்கும் புகைப்படம்  இனையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை  உற்சாகப்படுத்தி உள்ளது. இன்னும் படத்திற்கு தலைப்பு வைக்காத நிலையில் அடுத்தடுத்து  புகைப்படங்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல்  பொங்கல் ஸ்பெஷலாக ஃபஸ்ட் லுக்  வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.