ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜே.சதீஷ்குமாருடன் இணைந்து ‘லியோ விஷன்’ நிறுவனம் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ள படம் ‘அண்டாவ காணோம்’.

தமிழில் 2006-ஆம் ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளியான ‘திமிரு’ படத்தில் மிரட்டலான வில்லியாக திரையுலகிற்கு அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. இதனைத் தொடர்ந்து ‘வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  இளையதளபதி விஜய்யின் 'ஆளப்போறான் தமிழன்' பாடலின் வரிகள்

இதனையடுத்து, அறிமுக இயக்குனர், சி.வேல்மதி இயக்கத்தில், ‘அண்டாவ காணோம்’ திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ளார். அவருடன் வினோத் முன்னா, நவீனா நடித்துள்ளனர். அஸ்வமித்ரா இசையமைத்துள்ளார். பி.வி.ஷங்கர், ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பாளர் சத்யராஜ் நடராஜன், கலை இயக்குநர் ஏ.கே.முத்து, பாடலாசிரியர் மதுரகவி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இதையும் படிங்க பாஸ்-  தருமபுரி பஸ் எரிப்பு குற்றவாளிகளான 3 அதிமுவினர் விடுதலை!

படம் முடிந்து 2 வருடங்கள் ஆகிறது. சதீஷ்குமாருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக படம் வெளிவருவதில் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து, சமீபத்தில், வெளியிடப்பட்ட டீசர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்களிடையே இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  காதலர் தினத்தில் சாய்பல்லவியின் முதல் படம்

இதையடுத்து, படத்தை வருகிற அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.