சமீபத்தில் வெளியான ‘இவன் தந்திரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் அடுத்த இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க அதர்வா முரளி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை அதர்வா மற்றும் ஆர்.கண்ணன் தங்களது டுவிட்டரில் உறுதி செய்துள்ளனர்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு ராதான் என்பவர் இசையமைக்கவுள்ளார். இவர் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆன ‘அர்ஜூன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை, மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு பிரச்சன்னா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.