மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைவில் அதிமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெ.வின் மறைவிற்கு பின் அரசியலில் களம் இறங்கியர் தீபா. தொடக்கத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் மவுசு இருந்தாலும் போகப்போக அது குறைந்துவிட்டது. ஆனால், தீபா பேரவையில் அவர் நியமித்த சில நிர்வாகிகள் மட்டும் இன்னும் அவருடன் உள்ளனர்.

இந்நிலையில், தற்போதுள்ள சூழ்நிலையில் தீபா அதிமுகவில் இணைய வேண்டும் என தீபாவின் கணவர் மாதவன் கருதுகிறாராம். எனவே, இது தொடர்பாக அவர் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசி, தீபாவிற்கு சரியான அங்கீகாரம் அளித்தால் அவருடன் நான் பேசி இணைப்புக்கு ஏற்பாடு செய்கிறேன் எனக்கூறியுள்ளார்.

எனவே, ஜெயக்குமாரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பேசியுள்ளார். இறுதியில், ஜெயலலிதாவின் குடும்ப பெண் தீபா நம்முடன் இருப்பது நமக்கு பலம்தான் என முடிவெடுத்து பழனிச்சாமியும் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

அதேபோல், தீபாவும் அவரது பேரவை நிர்வாகிகளிடம் இதுபற்றி ஆலோசனை செய்துள்ளார். அவர்களும் அதிமுகவில் இணைவதையே விரும்ப விரைவில் தீபா பேரவை மற்றும் மாதவனின் எம்.ஜி.ஆர் அண்ணா திமுக ஆகியவை அதிமுகவுடன் இணையும் இணைப்பு விழா நடக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்கிற ஆலோசனை நடந்து வருகிறது. தீபா மக்களுக்கு பரிச்சயனமானவர், ஜெயலலிதாவின் அண்ணன் மகள். எனவே, பிரச்சாரம் செய்யவும் சுலபமாக இருக்கும் என்கிற பேச்சும் அடிபடுகிறதாம்.

எனவே, திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக தீபா அறிவிக்கப்பட்டாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை என அரசியல் விமரச்கர்கள் கூறி வருகின்றனர்.