தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்துள்ளனர் . பலர் நடிகர்கள் வில்லன் கதாபாத்திரத்துக்காக சிக்ஸ்பேக் வைத்து மிரட்டுகின்றனர்.உதாரணமாக சூர்யா விக்ரம் பரத் விஷால் அதரவா போன்றோர் ஹீரோவாக சிக்ஸ்பேக் வைத்து நடித்தனர் .அருண்விஜய் என்னை அறிந்தால் படத்தின் மூலமாக சசிக்ஸ்பேக் வைத்து வில்லனாக மிரட்டினார் .

 

இந்தே வரிசையில் தற்போது எஸ் .ஜே .சூர்யாவும் இணைந்துள்ளார் .வை ராஜா வை ,யட்சன் ,இறைவி போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது ஏ .ஆர் .முருகதாஸ் மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் புதிய படத்தில் வில்லன் அவதாரம் எடுக்கிறார் . அவர் இந்த படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்துள்ளார் .

 

இந்த படத்தில் மகேஷ்பாபுவும் எஸ் .ஜே .சூர்யாவும் மோதிக்கொள்ளும் பயங்கரமான அதிரடியான  சண்டை காட்சி இடம் பெறுகிறது .இந்த காட்சியை இயக்க ஏ .ஆர் .முருகதாஸ் தயாராக இருக்கிறார் .