பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘நிமிர்’

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்து உதயநிதி கூறியதாவது:

பிரிவியூவில் படத்தை பார்த்த என் மனைவி, உன் கேரியரில் ‘மனிதன்’ படத்துக்கு பிறகு அதை விட ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறாய், ஆனாலும் ஃபகத் பாசில் நடித்ததில் பாதியை மட்டுமே செய்திருக்கிறாய் என சொன்னார். அவர் கொடுத்த இந்த பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்