கார்த்தி போலீஸ் அதிகாரியாக மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கார்த்தி ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அதன்பிறகு, நிறைய படங்களில் கார்த்தி நடித்திருந்தாலும், போலீஸ் வேடம் ஏற்று நடித்ததில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘இப்ப  தீரன் அதிகாரம் ஒன்று’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர் வினோத் இயக்கவிருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

 இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. முழுக்க முழுக்க சென்னையிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் நடத்தி முடிக்கவுள்ளனர். மேலும், இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.