அமலாபால் ஹேப்பி அண்ணாச்சி

05:33 மணி

படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நடிகை அமலாபால் கூறியுள்ளார்.

அமலாபால் தற்போது ‘வடசென்னை’, ‘வேலையில்லாபட்டதாரி-2’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். திருமாணமாகி கணவரை பிரிந்த போது இருந்த மனநிலையும், இப்போது இருக்கும் சூழ்நிலையும் என்ன என்பதை அமலாபால் கூறுகிறார்….
“ மதம், இனம் அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். எப்போதும் நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை எனது குடும்பத்தினருடன் தான் கொண்டாடுவேன். கடந்த ஆண்டு என் தந்தை மருத்துவமனையில் இருந்தார். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை டாக்டர்கள் நர்சுகளுடன் கொண்டாடினோம். இந்த ஆண்டு கொச்சியில் உள்ள வீட்டில் உறவினர்களுடன் கொண்டாடினேன்.

 

என் கை நிறைய படங்கள் உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னைப்பற்றி நான் நிறைய தெரிந்து கொண்டிருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படும் போதும், மனதளவிலும் எவ்வளவு வலிமை கொண்டவள் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் ரசித்து வாழ விரும்புகிறேன்.

திருமணமாகி விவாகரத்தாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது மன வருத்தம் அதிகமாக இருந்தது. இப்போது விஜயும், நானும் அவரவர் வழியில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்”.

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com