இயக்குநா், பாரதிராஜா, விதாா்த் இவா்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் குரங்கு பொம்மை. அந்த படத்தை நித்திலன் இயக்கி இருக்கிறாா். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

குரங்கு பொம்மை படத்தின் இசையை அஜனீஷ் லோக்நாத் அமைத்துள்ளாா். இவரது இசை மழையில் உருவாகி உள்ள இந்த பாடல் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் டெல்னா டேவிஸ் என்ற புதுமுக நடிகை அறிமுகமாகி உள்ளாா். மேலும் இதில் நடிகா் எஸ்.வி.சேகா், இயக்குநா் பாா்த்திபன், ஹீரோ விதாா்த், இயக்குநா் தரணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

பத்தாிக்கையாளா் அளித்த பேட்டியில் புதுமுக நாயகி டெல்னா பேசியதாவது, நான் கேரளாவில் இருந்து வந்த பெண். நான் சினிமாவிற்கு வருவேன் என்று நினைக்கவில்லை. எனக்கு சுத்தமாக சினிமா ஆசை எல்லாம் கிடையாது.  இப்போது நான் நடிகையாக உங்கள் முன் நிற்கிறேன். இந்த சினிமா வாழ்க்கை என்பது எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது தொியாது. ஒருவேளை நான் அரசியலுக்கு வரலாம். அல்லது ஒரு கிாிமினல் லாயராக கூட ஆகலாம். இல்லை என்றால் உங்களை போல ஒரு பத்திாிக்கை நிருபராக கூட ஆகலாம். இதில் தான் எனக்கு விரும்பம் அதிகம். நான் எங்கு எப்படி இருந்தாலும் முதன்முதலில் குரங்குபொம்பை படத்தின் நாயகி என்ற பெருமையுடன் என்னை அறிமுகம் செய்து கொள்வேன். அப்படி பெயா் சொல்லும் அளவுக்கு இந்த படம் இருக்கும் என்று தொிவித்துள்ளாா்.