அரசு பள்ளி ஆசிரியையை வாலிபர் பலவந்தப்படுத்தி கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருக்கு பேஸ்புக் மூலம் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த ராஜபிரவீன்(25) என்பவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியையிடம் நைசாக பேசிய ராஜபிரவீன் ஆசிரியையிடம் தேர்விற்காக 40,000 பணம் வேண்டுமென கேட்டுள்ளான். ஆசிரியையும் பணம் தர ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து ராஜபிரவீன் கோவைக்கு சென்று ஆசிரியையிடம் பணம் வாங்கியுள்ளான். பின்னர் ஆசிரியைக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து அவரை கற்பழித்துள்ளான். இதனை வீடியோவாக எடுத்து வைத்து ஆசிரியையிடம் 2 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளான்.

இதுகுறித்து அந்த ஆசிரியை அளித்த புகாரின் பேரில் போலீஸார் கொடூரன் ராஜபிரவீனை தேடி வருகின்றனர். தெரியாதவர்களிடம் பார்த்துப் பழகுங்கள் என போலீஸார் எவ்வளவு கூறினாலும் இந்த ஆசிரியை மாதிரியான சிலர் திருந்திய பாடில்லை.

Loading...