Connect with us

உலக செய்திகள்

ஆண்ட்ராய்டு மொபைலை குழந்தைகளிடம் கொடுக்காதீர்கள்…!

Published

on


இன்றைய நாட்களில் குழந்தைகள் ஒரு பக்கம் அறிவியல் வரத்தோடு வளர்ந்து வந்தாலும், இன்னொரு வகையில் சாபத்தோடு வளர்வதாகவே தோன்றுகிறது. நீச்சல், நடைபயிற்சி, புழுதி பறக்கும் தெருக்களில் விளையாட்டு என்று மறைமுகமாக அவர்களது உடல் உழைப்பை வீணடித்து பல பெற்றோர்கள் டியூஷன் செண்டர்களிலும், தொலைக்காட்சிகளின் முன்னாலும், வீட்டின் வரவேற்பறையில் ஸ்மார்ட் போன் கொடுத்தும் அமர வைத்து விடுகிறார்கள். இன்று நமது வாழ்வின் முக்கிய அங்கமாகவே ஸ்மார்ட் போன் மாறிவிட்டது. அழுகிற குழந்தைகளின் கைகளில் கூட, ஏதோவொரு வீடியோவில் பாட்டைப் போட்டு, ஸ்மார்ட் போனை கைகளில் கொடுத்து விடுகிறார்கள்.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில், குழந்தைகள் பல மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். பெரியவர்கள் தான் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் இன்றைய நிலவரத்தில் குழந்தைகளும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உருவாகி வருகின்றது. ஒரு வயது குழந்தைகள் கூட ஸ்மார்ட் போனை பயன்படுத்த தெரிந்து வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட ஸ்மார்ட் போனுக்கு குழந்தைகள் அடிமைகளாகவே மாறி வருகிறார்கள்.


கைகளில் போனை வைத்து கொண்டு குனிந்து, தலையை கீழ் நோக்கி வைத்துக் கொண்டு தானே பயன்படுத்துகிறார்கள். இது சரியான முறையல்ல. நீண்ட நேரம் அதே நிலையில் குழந்தைகள் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்தால் அவர்களது கழுத்து பகுதியில் அதிகமான வலி ஏற்படும். குழந்தைகள் ஸ்மார்ட் போனை உபயோகிக்கும் போது நேராக உட்கார்ந்து பயன்படுத்த கற்றுக் கொடுங்கள். தலையை குனிந்து போனை பார்ப்பதை தவிர்க்க சொல்லுங்கள்.
அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இடைவெளி எடுக்க சொல்லுங்கள். வெளியில் சென்று விளையாட சொல்லுங்கள். அல்லது வேறு செயல்களில் குழந்தைகளை கவனத்தை ஈடுபடுத்துங்கள். குழந்தைகளை ஒரு சிறந்த மனிதனாக உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு 8-9 மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். எனவே குழந்தைகளை 8-9 மணி நேரம் தூங்க விடுங்கள். அதிக நேரம் தூங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதிகநேரம் தூங்குவது, குழந்தைகளின் உடல்நலத்திற்குப் பாதிப்பினை ஏற்படுத்தும். குறிப்பாக காலையில் குழந்தைகளை எழுப்பும்போது, அடித்து எழுப்பாதீர்கள்.
குழந்தைகளுக்கு தினமும் இரவில் ஒரே நேரத்தில் படுக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஒழுங்கான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.
குழந்தைகளை சுத்தமாக டிவி பார்க்கவே கூடாது என்று சொல்லக்கூடாது. அதேசமயம் அளவுக்கு அதிகமாக டிவியையும் பார்க்க விடக்கூடாது. அதற்குப் பதிலாக விளையாட்டில் ஈடுபட வைக்கலாம். இதனால் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதோடு, கண்ணிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமலும் இருக்கும்.
அளவுக்கு மீறினால் எல்லாமே நஞ்சு தான். ஸ்மார்ட் போன் பயன்படுத்த உங்கள் குழந்தைகள் தெரிந்து வைத்திருப்பது நல்ல விஷயம் தான். ஆனால், அளவோடு பயன்படுத்தவும் கற்றுக் கொடுங்கள்.

darbar
செய்திகள்11 hours ago

தர்பார் திருவிழா – முருகதாஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

செய்திகள்12 hours ago

ஒரு வருஷம் ஆச்சு… ஒன்னும் நடக்கல.. சின்மயி வேதனை….

thalapathy64
செய்திகள்13 hours ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

fathima
செய்திகள்13 hours ago

சுடிதார் பேண்டின் கயிற்றினை கட்டத்தெரியாத என் மகள்.. கதறும் பாத்திமாவின் தாய்..

Hero
செய்திகள்14 hours ago

டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன் – ஹீரோ படத்தை வெளியிட தடை

ajith
செய்திகள்14 hours ago

நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய அஜித் – யாரை தெரியுமா?

செய்திகள்15 hours ago

இந்திய பவுலர்கள் அபாரம் – 150 ரன்னுக்கு சுருண்ட பங்களாதேஷ் !

உலக செய்திகள்15 hours ago

மனித தலை கொண்ட மீனா ? – இணையத்தைக் கலக்கும் வீடியோ !

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்4 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending