விக்ரம் நடித்த ‘சாமி 2’ வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி
திரைக்கு வருகிறது. மேலும், விஜய் சேதுபதி, அரவிந்த்
சாமி, சிம்பு, அருண் விஜய் ஆகியோர் நடித்துள்ள ‘செக்கச்
சிவந்த வானம்’ செப்டம்பர் 27-ஆம் தேதியும், இயக்குநர்
பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய
கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’
செப்டம்பர் 28-ஆம் தேதியும் வெளியாகின்றன.

சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி,
திரிஷா ஜோடியாக நடித்துள்ள ’96’ திரைப்படம் அக்டோபர் 4-ல்
வெளியாகிறது.

ஆயுத பூஜையான அக்டோபர் 18-ஆம் தேதி
தனுஷின் ‘வடசென்னை’, விஷாலின் ‘சண்டக்கோழி-2’,
ஜோதிகாவின் ‘காற்றின் மொழி’, ஸ்ரேயா ரெட்டியின்
‘அண்டாவ காணோம்’ ஆகிய 4 படங்கள் வெளியாகின்றன.

ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸாகும் படங்களால்
ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.