இடைத்தேர்தலுக்குள் வெளியாகுமா வெங்கட்பிரபுவின் ஆர்.கே.நகர்

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தயாரித்து வரும் ஆர்.கே.நகர் திரைப்படத்தின்படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பு இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்’

ஆனால் தேர்தலுக்கு இன்னும் பத்து தினக்கள் மட்டுமே இருப்பதால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஒருவேளை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அல்லது ரத்து செய்யப்பட்டால் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் வாய்ப்பு உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்த்னர்.

வைபவ், சனா, சம்பத் உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சரவணன் ராஜன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜெய் நடித்த ‘வடகறி’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பும்,  விதேஷ் கலை இயக்கமும், வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம் டிசைனும் செய்து வருகின்றனர். இந்த படத்தை சர்வண ராஜன் இயக்கி வருகிறார்.