லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘செக்கச்சிவந்த வானம்’.

இப்படத்தில், விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதீதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

படத்தின் டிரெய்லரை கடந்த 25ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். அனல் பறக்கும் விதமான காட்சிகளுடன் படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக ரசூல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய்சேதுபதியின் ‘ரசூல் கதாபாத்திர’ மேக்கிங் விடியோ இணையத்தில் வெளியாகி மிரட்டி வருகிறது. இதனால், ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.