Connect with us

க்ரைம்

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Published

on

தற்கொலை செய்துக் கொண்ட பள்ளி மாணவி, இறுதியாக எழுதியவைத்த கடிதம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மெயின்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் இருந்த கூடத்தில் நேற்று காலை தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த விஷயம் தெரிந்த பள்ளி நிர்வாகத்துக்கு, உடனடியாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த அறையை சோதனை நடத்தியதில் இடத்தில் தற்கொலை செய்துக் கொண்ட மாணவி எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. இதில், “அந்த சம்பவம் நடந்து மூன்று வருஷம் ஆகிவிட்டது. அதனால் இன்றும் நான் தண்டிக்கப்படுகிறேன். இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை. தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டேன். என்னை விரும்பியவர்கள்கூட என்னிடம் இருந்து விலகிவிட்டனர்.

என்னுடன் படிக்கும் வகுப்பு தோழிகளே புறக்கணிக்கும்போது 12ம் வகுப்பு வரை என்னால் எப்படி அவர்களுடன் படிக்க முடியும்? எனவேத்தான், தற்கொலை செய்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அப்பள்ளி மாணவி ஒருவர் கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு முன்பு அவள், மற்றொரு மாணவியின் உணவை திருடிவிட்டாள். இதற்காக சீனியர்கள் அவளை 48 மாணவிகள் அவளை அடித்தனர். இன்றும் யாரும் பேசவில்லை என கூறியுள்ளார். மாணவியின் இந்த தற்கொலை செய்துகொண்டது, உருக்கமாக எழுதிய கடிதமும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்20 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending