கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு இவ்வாண்டு செப்டம்பர் முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் வசனகர்த்தாவாக கபிலன் வைரமுத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதும் நிலையில் அவருடன் இணைந்து கபிலன் வைரமுத்துவும் வசனம் எழுத உள்ளார்

கபிலன் வைரமுத்து ஏற்கனவே அஜித்தின் விவேகம் மற்றும் கே.வி.ஆனந்தின் கவண் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.