Connect with us

அரசியல்

இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து தமிழர்களும் திரளும் திமுக போராட்டம்

Published

on

இந்தி திணிப்புக்கு எதிராக அனைத்து தமிழர்களும் திரளும் திமுக போராட்டம் –

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்திருவண்ணாமலையில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், பாரதிதாசன் பெயரில் வழங்கப்படும் விருதுகளை தி.மு.க முன்னோடிகளுக்கு வழங்கி கவுரவித்தார்.இவ்விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாளான ஜூன்3-ந் தேதி செம்மொழி நாளாக கொண்டாடப்படும். அந்த நாளில் திராவிடர் இயக்கப் படைப்பாளிகளுக்கு விருதும் வழங்கப்படும்.

திமுக பல வெற்றி தோல்விகளைப் பார்த்த இயக்கம். திமுகவைப் போல் வெற்றிகளையும் திமுகவைப் போல் தோல்விகளையும் எதிர்கொண்ட கட்சி வேறு எதுவும் இல்லை. தாய்மொழிகாக்க 1965-ல் துப்பாக்கிக் குண்டுகளை நேருக்கு நேர் பார்த்த இயக்கம் திமுக. மொழி காக்க தேக்குமர தேகங்களை
தீக்கிரையாக்கியவர்கள் திமுகவினர். இத்தகைய தியாகங்களால்தான் திமுகவுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பை மக்கள் கொடுத்தனர் என்று தெரிவித்தார்.

மேலும், திமுக அரசின் சாதனை சரித்திரத்தைப் போல் எந்த கட்சிக்காவது உண்டா? தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் பினாமி ஆட்சி, வெளிநாடு சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டில் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவில்லையே ஏன்? தமிழகத்தில் முதலீடு செய்ய இருக்கும் நிறுவனங்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை?

தமிழகத்தில் ஏற்கனவே முதலீடுகளை தொடங்கியதாக சொல்லப்படும் 220 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட தயாரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர்,மத்திய அரசு மட்டும் முட்டுக்கொடுக்காமல் இருந்தால் அதிமுக அரசு நீடித்திருக்குமா? என்றும், மத்திய அரசின் 100 நாட்களில் பொருளாதாரத்தை 5% ஆக குறைத்தது தான் மிகப் பெரும் சாதனை என்றும், மத்திய அரசின் கலாசார படையெடுப்பை தடுக்க வேண்டிய மாபெரும் இயக்கம் திமுக.என்றும் தெரிவித்தார்.

அமித்ஷாவுக்கும், மோடிக்கும் தாய்மொழி இந்தியே அல்ல…. பிறகு ஏன் இந்தி மொழிக்கு வக்காலத்து? 2 நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது, இந்தி பேசாத மக்களுக்கு தேள்கொட்டியது போன்ற செய்தி.இந்தியாவில் மொத்தம் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஒரே நாடு ஒரே மொழி என இந்திக்கு மட்டும் மகுடம் சூட்டுவது என்பது இந்தி திணிப்புதான். இன்று இந்தி திணிக்க சட்டம் கொண்டுவருவார்கள்- நாளை தமிழைப் படிக்கவும் தடை சட்டம் கொண்டுவந்தாலும் வருவார்கள்.

அதனால்தான் இந்தி திணிப்பை தந்தை பெரியார் கலாசார படையெடுப்பு என்றார். அத்தகைய கலாசார படையெடுப்பை எதிர்க்கும் போராட்டத்துக்கு திமுக தயாராக இருக்கும். சென்னையில் இன்று திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் ஆலோசித்து அறிவிப்பை வெளியிட இருக்கிறோம்.

இந்தியை திணிக்கும் எந்த முயற்சியை நாங்கள் பார்த்து கொண்டிருக்கமாட்டோம், இந்தியை திணிக்கும் முயற்சியை தடுக்க எந்த ஒரு தியாகத்துக்கும் திமுக தயாராக இருக்கிறது, இந்தி- இந்தியா இதில் இந்தியாதான் எங்களுக்கு வேண்டும்- இந்தி தேவை இல்லை என்கிறோம். இந்தி திணிப்பு என்பது ஒரு கலாசார படையெடுப்பு. திமுக நடத்தப் போகும் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அத்தனை தமிழர்களும் பங்கேற்க வேண்டும். அன்று 1938-ல் தொடங்கிய மொழிப்போரை 2019-லும் நடத்துகிற சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.என்று பேசினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்25 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்6 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்7 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending