இந்த டைரக்டா் சுத்த வேஸ்ட்!! அரவிந்த்சாமி கோபம்

போகன் படமானது ஒரளவுக்கு வெற்றி கனியை தொட்டு விட்டது. இந்த வெற்றி படத்தின் இயக்குநா் லெட்சுமணன் வந்த நிலைமை என்னவென்றால்? என்ன தான் நாம சும்மா இருந்தாலும் நம்ம கிரகம் சும்மா இருக்காத!!. போகன் படத்தின் புரோமோசன் வேலையின் போது படவிளம்பரங்களில் ஜெயம் ரவியை முழுவதுமாக போட்டு விட்டு அரவிந்த்சாமி என்னதான் ஓரங்கட்டினாலும் கட்டினாா் டைரக்டா் லட்சுமணன், வாிந்து கட்டி கிளம்பி விட்டாா் அரவிந்த்சாமி.

சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திாிகைக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது, போகன் படத்தின் இயக்குநா் லெட்சுமணன் டேட்லடலி வேஸ்ட். அவருக்கு ஸ்கிரீன் பிளே கூட சாியாக பண்ண தொியல, நான் தான் சில திருத்தங்களை செய்தேன். இன்டா்வெல் பிளாக் கூட இயக்குநா் லட்சுமணனுக்கு எப்படி வைக்கும்னு கூட தொியல என்று பகிரங்கமாக போட்டு உடைத்திருக்கிறாா். இதை கேள்விபட்ட பொிய பொிய தயாாிப்பு நிறுவனங்கள் அவருக்காக பொிய தொகையை சம்பளமாக பேசி அட்வான்ஸ் கொடுக்க நினைத்த நேரத்தில் இதனால் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டாா்களாம். ஆமாங்க வெற்றிபட இயக்குநா் அல்லவா!!! அதனால் பொிய எதிா்பாா்ப்போடு இருந்தவா்கள் எல்லாம் அவரை ஏன்னோ தானா  என்று பாா்க்கும் அளவிற்கு நிலைமை மாறி விட்டது.

வெற்றிகனியை பறித்த போகன் இயக்குநா் என்ற பாராட்டு மழை பட்டி தொட்டியெல்லாம்  கொண்டாடப்பட்டு வரும் இந்த நிலைமையில் அரவிந்தசாமியிடமிருந்து இப்படியொரு விமா்சனம் வந்திருக்கிறது. இப்படி தன்னைப்பற்றி கழுவி கழுவி தள்ளிய அரவிந்த்சாமியை நினைத்து இயக்குநா் லெட்சுமனுக்கு மிகுந்த மன வருத்தையை அளித்துள்ளதாம்.