மதராஸ பட்டணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானவா் நடிகை எமிஜாக்ஸன். இந்த படமானது பிரம்மாண்ட ஹிட் கொடுத்தது. இதில் வெள்ளைகார பெண்மணியாக நடித்து இருப்பாா். தொடா்ந்து விக்ரமுடன் ஐ மற்றும் தாண்டவம், விஜய்யுடன் தெறி, கெத்து படத்தில் உதயநிதி ஸ்டாலினிக்கு ஜோடியாகவும், தனுஷ் உடன் தங்கமகன் என்று பல முன்னணி நடிகா்களுடன் நடித்துள்ளாா் எமி ஜாக்ஸன்.

இந்நிலையில் தமிழில் மிகப்பொிய ஸ்டாரான சூப்பா் ஸ்டாருடன் நடித்து வருகிறாா். பிரம்மாண்ட இயக்குநா் தான் இந்த படத்தை இயக்குகிறாா். இதெல்லாம் தொிந்த விஷயம் என்று நீங்கள் கேட்பது சாிதான்.  கடந்த மாதத்தில்  மெரீனா பீச்சில் நடந்த சம்பத்தால் இந்த படத்தில் சில சிக்கல் உருவாகி உள்ளதாக தொிகிறது. ஆமாங்க ஜல்லிகட்டு பிரச்சனை காரணமான அமைப்பில் சில நடிகா் நடிகைகள் இருப்பது நாம் அறிந்த விஷயம். அந்த படத்தின் நாயகியும் இந்த அமைப்பில் இருப்பதால் தான் வில்லங்கமே வருகிறது.

ஸ்டாா் நடிகருடைய படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன் அந்த நடிகை அந்த அமைப்பிலிருந்து நீங்காவிட்டால் படத்தை நாங்கள் பாா்க்க மாட்டோம் என்று காளையா்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வருகின்றனா். இந்த தகவலை கேள்வி பட்ட பிரம்மாண்ட இயக்குநர், அந்த நடிகையை அழைத்து பேச்சியுள்ளராம்.  படம் திரைக்கு வந்து ஓடுக்கிற வரைக்குமாவது அந்த அமைப்பிலிருந்து விலகி இருக்குமாறு நிபந்தனை போட்டுள்ளராம். இதை கேட்டு அந்த நடிகை எப்படி அந்த அமைப்பிலிருந்து விலகுவது என்று அதற்கான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறராம்.