சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தின் ஆடியோ விழா துபாயில் அரங்கேறியுள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை இதுபோன்ற பிரமாண்டமான ஆடியோ விழா நடைபெற்றது இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த விழா பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர்.இந்த நிலையில் ஆடியோ விழாவின் சிறப்பு அம்சமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகள் அரங்கேறிவுள்ளது. அவற்றில் ஒன்று தமன்னா ரோபோ போன்று நடனம் ஆடும் ஒரு நிகழ்ச்சி

      இந்த நிகழ்ச்சிக்காக தமன்னா ரோபோ போன்ற உடையணிந்து பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் சற்றுமுன் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஒரே ஒரு பாடலில் நடனம் ஆடுவதற்காக மட்டும் தமன்னாவுக்கு கோடியை நெருங்கும் ஒரு தொகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.