இன்னும் 4 வருடம் நோ கால்ஷீட்

தமிழ் திரையுலகில் வேகமாக முன்னனி நடிகர் இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற சாதனையையும் தட்டிச் சென்றார். இந்த நிலையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு அவரிடம் கால்ஷீட் கேட்டு செல்ல முடியாது. காரணம் 4 ஆண்டுகளுக்கு  கால்ஷீட் அவரிடம் இல்லை. அந்த அளவிற்கு அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

டபுள் ஹீரோ சப்ஜெட் என்றாலும் அவர் ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்வதால் அவரை இயக்குனர்கள் அதிகம் விரும்புகின்றனர். உதாரணத்திற்கு கௌதம் கார்த்தியுடனும், மாதவனுடன் நடித்துவருவதை குறிப்பிடலாம்.  மேலும் வித்தியாசமான கதைக்களம் என்றால் விஜய் சேதுபதி மட்டு7மே இயக்குனர்களின் சாய்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.