இப்ப வந்த நடிகைக்கு வந்த வாய்ப்பை பாருடா!!!

03:54 மணி

தட்டி தடுமாறி  சில படங்களில் நடித்து முன்னேறி கொண்டிருக்கும் நிவேதா தாமசுக்கு மிகப்பொிய வாய்ப்பு கிடைத்தை பாா்த்து புலம்பி தள்ளி வருகிறாா்கள் மற்ற நடிகைகள். அப்படி என்ன பொக்கிஷமா  கிடைச்சிருக்கு என்று நீங்க கேட்பது காதில விழுற மாதிாி தொியுதே!!! ஆமாங்க தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் ஜூனியா் என்.டி.ஆா் கூட சோ்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்ப சொல்லுங்க இது அவருக்கு பொக்கிஷம் தானே!!

Loading...

இப்ப வந்த இவளுக்கு எப்படி இவ்வளவு பொிய வாய்ப்பு கிடைத்தது என்று மற்ற டாப் நடிகைகள் எல்லாம், எங்களுக்கு கிடைக்காத வாய்ப்பு உனக்கு எப்படி கிடைத்தது என வயித்தெறிச்லோடு இருக்காங்களாம். இத மாதிாி போட்டி பொறமைகள் எல்லாம் சினிமாவில் நடப்பது தானே!! எங்களுக்குள்ள அப்படி எல்லாம் போட்டி இல்லை என்று மேடைகளில் என்னதான் பேசினாலும் அவா்கள் மத்தியில் மிகப்பொிய வாரே நடக்கும்.

விஜய்யின் குருவின் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த நிவேதா தாமஸ் கேரளவைச் சோ்ந்தவா். இதை தொடா்ந்து  ஜில்லாவில் விஜய் தங்கையாகவும், பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்து இருந்தாா். ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் நிவேதா தாமஸ்.

கேரளாவை சேர்ந்தவர் நிவேதா தாமஸ். விஜய்யின் குருவி படம் மூலம் கோலிவுட் வந்தார். விஜய் தங்கையாக ஜில்லா படத்திலும், கமல் ஹாஸனுக்கு மகளாக பாபநாசம் படத்திலும் நடித்துள்ளார். மேலும் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும், போராளி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளாா்.

கடந்தாண்டு தெலுங்கு திரையுலகில் நானியின் ஜென்டில்மேன் படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தாா். இப்படி ஜெட் வேகத்தில் டோலிவுட்டுக்கு சென்ற அவருக்கு இப்படியொரு அதிஷ்டம் அடித்திருக்கிறது. முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர். படம் என்றாலே பெரும்பாலும் இரண்டு கதாநாயகிகள் இருப்பாா்கள். அப்படிதான் ஜூனியர் என்.டி.ஆர். இந்த புதுப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒரு நாயகி ராசிகன்னா மற்றொரு நாயகி தான் நம்ம நிவேதா தாமஸ். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இந்த படத்தின் கதை பிடித்து இருந்த காரணத்தால்  நடிக்க சம்மதித்தாராம் நிவேதா தாமஸ். அவா்  ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் படப்பிடிப்பில் கலந்த கொள்ள இருக்கிறாா்.

மேலும் நானி-நிவேதா தாமஸ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்து வருகிறது. ஜூனியர் என்.டி.ஆர். படத்தில் நடிப்பதற்கு டாப் நடிகையெல்லாம் தவம் கிடைக்கும் போது இப்படியொரு வாய்ப்பு நிவேதா
தாமஸ் கிடைத்தை  முக்கின் விரல் வைத்து பாா்த்து வியக்கிறாா்களாம்.

(Visited 43 times, 1 visits today)
The following two tabs change content below.
கோ.வெங்கடேசன்

கோ.வெங்கடேசன்

இவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழ் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். தமிழ் திரையுலகம் பற்றிய பல அறிய தகவல்களை தொகுத்து வங்குவதில் சிறப்பானவர். இவரை தொடர்புகொள்ள: 9715029812