Connect with us

தமிழகம்

இரண்டு பெண்களை திருமணம் செய்தும் திருப்தி அடையாத கணவன்!! நடுரோட்டில் தூக்கிப்போட்டு பந்தாடிய 2 மனைவிகள்..

Published

on

இரண்டு பெண்களை திருமணம் செய்தும் திருப்தி அடையாத கணவன்!! நடுரோட்டில் தூக்கிப்போட்டு பந்தாடிய 2 மனைவிகள்..

கோவை சூலூர் அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவரது மகன் அரங்க அரவிந்த தினேஷ். இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2016- ம் ஆண்டு இவருக்கும், திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவரது மகள் பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 15 நாட்களிலேயே அரவிந்த்,பிரியதர்ஷினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார். கொடுமை தாங்கமுடியாத அவர் தனது மாமனார், மாமியாரிடம் நடக்கும் சம்பவங்களை கூறினார். இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனையடுத்து பிரியதர்ஷினி இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். பின்னர் திருப்பூரில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதும் தனக்கு திருமணமானதை மறைத்து அரங்க அரவிந்த் திருமண வலைதளத்தில் திருமண தகவல் நிலையம் மூலம் மீண்டும் தனக்கு பெண் தேடினார்.

அப்போது திருமண தகவல் மையம் மூலமாக கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தஅய்யப்பன் என்பவரது மகள் அனுப்பிரியா என்ற பெண்ணை தனது முதல் மனைவிக்கு தெரியாமல்கடந்த ஏப்ரல் 10-ம் தேதி 2-வதாக திருமணம் செய்தார்.

அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அரங்கஅரவிந்த் அனுப்பிரியாவை ஒண்டிப்புதூரில் வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து வசித்து வந்தார்.
சில மாதங்கள் கடந்ததும் அரங்க அரவிந்த் முதல் மனைவியை கொடுமை படுத்தியது போல அனுப்பிரியாவையும் கொடுமைபடுத்தி உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா தனது கணவரை பிரிந்து கரூரில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். 2-வது மனைவியும் பிரிந்து சென்றதால் அரங்க அரவிந்த் மீண்டும் 3-வதாக திருமணம் செய்வதற்காக திருமண வலைத்தளத்தில் தனக்கு மணப்பெண் தேடினார்.

இதனை தெரிந்து கொண்ட 2 மனைவிகளின் குடும்பத்தினர் அரவிந்திடம் நேரில் சென்றுகேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அப்படித்தான் செய்வேன். உங்களால் முடிந்ததை பார்த்துகொள்ளுங்கள் என்று கூறினார்.

இதனையடுத்து முதல் மனைவி பிரியதர்ஷினி 2-வது மனைவி அனுப்பிரியா ஆகியோர் அரவிந்த்வேலை பார்த்து வரும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்பும்படி கூறினர்.
ஆனால் கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்து விட்டது. அதனையடுத்து 2மனைவிகளும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று அரங்கஅரவிந்தையும், அவரது 2 மனைவிகளையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அப்போது காவல் நிலையம் செல்ல அரங்க அரவிந்த் கம்பெனியில் இருந்து வெளியே வந்தார். இதனை பார்த்த அவரது 2 மனைவிகளும், அவர்களது குடும்பத்தினரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து 2 மனைவிகளிடம் இருந்து அரங்கஅரவிந்தை போலீசார் மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பின்னர் அரங்க அரவிந்த் மீது அவரது 2- மனைவிகளும் தங்களை ஏமாற்றி திருமணம் செய்து விட்டு,3-வதாக திருமணம் செய்ய முயன்றதால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0

செய்திகள்4 hours ago

ஆஸ்கர் செல்லும் கல்லிபாய் – தவறவிட்ட தமிழ்ப்படங்கள் !

அரசியல்4 hours ago

காமராஜர் ஆட்சி அமைப்பது சாத்தியமில்லை – காங்கிரஸ் கூட்டத்தில் சலசலப்பு !

அரசியல்5 hours ago

வெள்ளை மாளிகைக்கு உண்மையான நட்புடன் இருக்கிறது இந்தியா – ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு !

செய்திகள்5 hours ago

சொதப்பிய இந்தியா.. வெளுத்து வாங்கிய டிகாக் – சமனில் முடிந்த தொடர் !

ஜோதிடம்5 hours ago

இன்றைய ராசிபலன்கள் 23.09.2019

க்ரைம்15 hours ago

இன்னொருவரின் மனைவியை வீட்டிற்க்கு கூட்டி வந்து உல்லாச வாழ்க்கை இளைஞன்… சித்தி திட்டியதால் நேர்ந்த பரிதாபம்

சினிமா செய்திகள்15 hours ago

புதிய தோற்றத்தில் உலா வரும் அஜித்- ட்ரெண்டாகும் புகைப்படம்

அரசியல்17 hours ago

முன்னாள் நிலப்பதிவு பத்திரங்கள்… சொந்த மொழி விளக்கம் எவ்வளவு சிக்கல், அவ்வளவு ஈஸியா போச்சா? கண்டிக்கும் ராமதாஸ்

சினிமா செய்திகள்3 days ago

ரசிகர்களின் பார்வையில் காப்பான் திரைவிமர்சனம்…!

க்ரைம்6 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

க்ரைம்4 days ago

கணவரை விட்டு விட்டு காமத்திற்க்காக வேறு ஒருவருடன் சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்…!!

செய்திகள்6 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்3 days ago

தெரிஞ்சே 80 பேரின் வாழ்க்கையை சீரழித்த அருணா..? 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வரை…!

செய்திகள்6 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

க்ரைம்5 days ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

க்ரைம்3 days ago

தாயின் சேலையை நடு ரோட்டில் அவிழ்த்த இளைஞன்.. பின் இளைனனின் தலையை வெட்டி மூளையை தனியாக எடுத்த மகன்கள்…!!

Trending