நடிகை சமந்தா திருமணம் முடிந்த கையோடு தொடா்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவா் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த அவரது ரசிகா்கள் என்ன இந்த பொண்ணு நாகார்ஜூனா குடும்பத்திற்கு மருமகளாக மாறி பின்னா் இந்த மாதிரி கவா்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் என்று விமா்சித்து வந்தனா். அதற்கு சமந்தா தக்க பதிலடி ஒன்றை
கொடுத்துள்ளார்.

சமீபத்தில் மாலத்தீவிற்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளார் சமந்தா. அங்கு பொழுதை போக்கி வந்த அவா் பிகினி உடையில் படுத்திருப்பது போல போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிந்தார். திருமணத்திற்கு பிறகு இப்படி கவாச்சியில் பிகினியில் உள்ள போட்டோவை ஷோ் செய்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்.

சமந்தாவின் இந்த பிகினி போட்டோவை இதை வலைத்தளத்தில் பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக விமா்சித்துள்ளனா். இதற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்தது என்னவென்றால், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்வேன். நீங்கள் உங்களுக்கு என்ன வேலையோ அதை பாருங்கள் என்று கூறினார்.