சரத்குமாரின் மகளும் பிரபல நடிகையுமான வரலட்சுமி, சிபியின் சத்யா படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்த படம் குறித்தும் அவர் நடிக்கும் மற்ற படங்கள் குறித்தும் கூறியதாவது:

த்யா ஒரு திரில்லர் படம் ரொம்ப நல்லா வந்துருக்கு. இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு என்ன வேணுமோ அதை அவரே செய்து காட்டுவார். சிபி இதுவரைக்கும் இந்த மாதிரி படம் பண்ணது இல்லை எனவே அவருக்கு இது புதியதாக இருக்கும். ரம்யா நம்பிசன் கதாப்பாத்திரம் மற்றும் என் கதாப்பாத்திரம் என இரண்டுமே வித்தியாசமான ஒன்று. இசை சைமன் அருமையாக அமைத்து உள்ளார். எனக்கு முதலில் கதை தான் முக்கியம். எனக்கு ரொம்ப அழுத்தமான கதாப்பாத்திரம். படத்தில் விசாரனை அதிகாரியாக நடித்து உள்ளேன். இது போன்று தமிழில் நடித்தது இல்லை

ஆனால் மலையாளத்தில் மம்மூட்டி சாருடன் நடித்து உள்ளேன். ஒவ்வொரு கதாப்பாதிரமும் ரொம்ப முக்கியமான ஒன்று உதாரணமாக சதீஷ் எல்லா படங்களிலும் காமெடியனாக நடித்திருப்பார் ஆனால் இந்த படத்தில் காமெடியும் இருக்கும் சற்று மாறுபட்டும் இருக்கும். ஆனந்தராஜ் சார் பற்றி சொல்லவே வேண்டாம் ரொம்ப நல்ல நடிகர். படத்தில் யோகி பாபு என அனைவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. இந்த படம் கண்டிப்பாக சிபியை ஒரு படி மேலே கொண்டு போகும் படமாக இது அமையும்.

பொதுவாக நான் ரீமேக் செய்யப்படும் படங்களை பார்க்க மாட்டேன் ஏனென்றால் என் சுய உழைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புவேன். பாலா சார் பள்ளியில் இருந்து வந்ததால் எனக்கு இந்த அனுபவம் வந்துள்ளது. அதனால் ஒரே டேக்கில் எனுடைய கட்சிகளை முடித்து விட்டேன். மற்ற நடிகர்களுக்கு சில நாள் ஆனது. இசை மற்றும் நடனம் எனக்கு பிடிக்கும். அவை சில படங்களில் இருக்கும் இல்லாமலும் போகும்.
சண்ட கோழி படத்தில் ரொம்ப ரொம்ப வித்தியாசமான வேடமும் கதாப்பாத்திரமும் உள்ளது. விஷால், ராஜ்கிரண் நான் என திரையில் பார்க்கும் போது வித்தியாசம் தெரியும். இனி நான் நடிக்கும் கதைகள் அனைத்துமே மாறு பட்ட கதைகள் தான். விமலுடன் குடும்ப பட கதையில் நடிக்கிறேன். என்றார் வரலட்சுமி சரத்குமார்.