தேசிய கீதம் திரையரங்குகளில் திரையிடுவது குறித்தும், அந்த நேரத்தில் எழுந்து நிற்க வேண்டும் என்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

சிங்கப்பூரில் தினமும் இரவு தேசிய கீதம் இசைக்கப்படுவதாகவும் அதுபோல் நம் நாட்டிலும் டிடி தொலைக்காட்சியில் தேசிய கீதம் ஒளிபரப்பாலம் என்றும், அதைவிடுத்து பல இடங்களில் தேசிய கீதத்தை ஒளிபரப்பி எனது எனது நாட்டுப்பற்றை நிரூபிக்கவோ, பரிசோதிக்கவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம்’ என்றும் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் கமெண்டுக்கள் குவிந்து வருகிறது.