என்னை அப்படி அழைப்பது மகிழ்ச்சியளிக்கிறது: ஹன்சிகா

05:03 மணி

சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைப்பது மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று ஹன்சிகா கூறினார்.

நடிகர்-நடிகைகள் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். தங்களுடைய தகவல்களையும், கருத்துக்களையும் இதன் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்கள் இவர்களை இந்த சமூக வலைத்தளங்களில் பின் தொடர்கிறார்கள்.

ஹன்சிகாவை பேஸ்புக்கில் 60 லட்சம் பேர் தொடர்கிறார்கள். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இதற்காக ரசிகர்களுக்கு பாராட்டு தெரிவித்து ஹன்சிகா கூறியதாவது….

“ பேஸ்புக்கில் 60 லட்சம் ரசிகர்கள் என்னை தொடர்கிறார்கள். நாளுக்கு நாள் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ரசிகர்கள் மனதில் எனக்கு உயர்வான இடம் அளித்திருக்கிறார்கள். இதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வாழ்க்கையில் எத்தனை கோடி சம்பாதித்தோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு ரசிகர்கள் நமக்கு இருக்கிறார்கள் என்பதில் தான் உண்மையான சந்தோ‌ஷம் இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் என்னை சின்ன குஷ்பு என்று அழைக்கிறார்கள். இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைக்கிறது”

The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com