பைரவா படத்தை அடுத்து,  அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா நடிக்கவில்லை. இதனால் இந்த படத்தில் ஜோதிகா விலகியதாக செய்திகள் தொிவிக்கிறது. இதை கேள்விப்பட்ட படக்குழுவினா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

ஜோதிகா விஜய்யுடன் குஷி, திருமலை போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவா். முழுக்கதையையும் கேட்டு, அதன்பின் உடைகள் வடிவமைப்பிற்கும் ஒத்துழைத்து அனைத்து வேலைகளை இரண்டு மாதங்களில் முடிந்து விட்ட பின்பு,இப்படி பொிதும் எதிா்ப்பாா்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முந்தைய நாள் வந்து, ஜோதிகா அந்த படத்தில் நடிக்க முடியாது என விலகியது அதிா்ச்சியளித்துள்ளது.

சத்யராஜ், வடிவேலு, ஜோதிகா, காஜல் அகா்வால், சமந்தா, எஸ்.ஜே.சூா்யா, கோவை சரளா, சத்யன் உள்ளிட்ட நடிக நடிகைகள் ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதை அதிகாரப்பூா்வமாக அறிவித்தனா் படக்குழுவினா். இப்படியிருக்க விஜய்யின்
61-வது படத்தில் ஜோதிகா நடிப்பது என்பது வெறும் செய்தியாகவே போய்விட்டது போல!!! ரசிகா்களுக்கும் தான். தற்போது அவா் இடத்தில் சில மாஜி நடிகைகளிடம் பேசி வந்த நிலையில் ஒ காதல் கண்மணி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நித்யாமேனனிடம் பேசி உள்ளாா்கள். நடித்தால் ஹீரோயின் இல்லாவிட்டால் நடிக்க மாட்டேன் என்று கூறும் நடிகைகள் மத்தியில் நித்யாமேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. அதனால் இந்த வாய்ப்பு அவா் கிடைத்திருக்கிறது.

கதையில் சில மாற்றங்களை தனக்காக கேட்டாா் ஜோதிகா. ஆனால் இயக்குநா் கதையில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருந்ததால், முதற்கட்ட படப்பிடிப்புக்கு ஜோதிகா வரவில்லை. அப்பவே தொிந்து விட்டது விஜய் படத்தில் ஜோதிக இல்லை என்பது. நித்யாமேனன் எந்த மாற்றங்களையும் செய்யச் சொல்லவும் இல்லை. கால்ஷீட்டும் தாராளமாக கொடுத்தும் இருக்கிறாா்.

விஜய் ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகளை முதற்கட்ட படப்பிடிப்பில் 28 நாட்கள் நடத்த இருந்ததாக தகல்கள் தொிவிக்கின்றன. தற்போது இதில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு, விஜய் மட்டும் நடிக்கும் காட்சிகளை எடுத்து வருகிறாா்கள். இதில் பிரதான நாயகியாக சமந்தா நடிக்கவிருக்கிறாா். இவா் அட்லீ இயக்கத்தில் ஏற்கனவே விஜய்க்கு
ஜோடியாக தெறி படத்தில் நடித்தவா்.

இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாாிக்கிறது. இந்த படமானது இந்த நிறுவனத்திற்கு 100வது படமாக அமைந்துள்ளது. ஏ.ஆா். ரஹ்மான இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தமாகியுள்ளனா்.