ஏமாற்று வேலை; எல்லாமே நாடகம்: மத்திய அரசுக்கு தமிழக தலைவர்கள் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட் கொடுத்த 6 வார கால கெடு முடிவடைந்த நிலையில் தற்போது மத்திய அரசு மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு இன்று காலை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த மனுவிற்கு தமிழக தலைவர்கள் தெரிவித்த கண்டனம் குறித்து தற்போது பார்ப்போம்

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்: மத்திய அரசு கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்துள்ள மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து தீர்ப்பை நிலைநாட்ட போராடும் மத்திய அரசின் மனுவை விசாரிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தெரிவிக்கும்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: காவிரி விவகாரத்தில் தமிழக அரசு, அனைத்து கட்சிகளுடன் பிரதமரை நேரில் சந்தித்திருக்க வேண்டும்

கனிமொழி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது வாரியம் அமைக்க காலம் தாழ்த்துவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு செய்கிறது

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை: கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சி அமைந்தால், சண்டை போட்டாவது தண்ணீரைப் பெற்று தருவோம்

துரைமுருகன்: காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசு 3 மாதம் அவகாசம் கேட்பது ஏமாற்று வேலை; எல்லாமே நாடகம்