ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாளமயம்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இரண்டு இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் இணையும் இந்த படம் ஒரு இசை சம்பந்தப்பட்ட படம் என்றும் இந்த படத்தின் கதை இதுவரை தமிழ் சினிமாவில் வந்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் நேற்று வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஜிவி பிரகாஷ் கழுத்தில் ருத்திராட்சமும், சிலுவையும் இருப்பது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.