‘காக்கா முட்டைக்கு முன்னாடியும் அட்டக் கத்தி போன்ற சில படங்கள் பண்ணியிருக்கிறேன். ஹீரோயினா நடிக்க முயற்சி பண்ணினப்ப அது உங்களுக்கு செட் ஆகாது, வேணும்னா ப்ரெண்ட், சிஸ்டர் காரெக்டர் ட்ரை பண்ணுங்கன்னும் சொல்வாங்க. இல்லைன்னா காமெடியனுக்கு ஜோடியா நடிக்கச் சொன்னாங்க. பெரிய இயக்குனர்கள் கூட அப்படி சொல்லியிருக்காங்க. காக்கா முட்டை தான் பெரிய ப்ரேக். இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவா நடிச்சு இப்படிப்பட்ட ப்ரேக் கிடைச்சது’ என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கும் வட சென்னை, மணி ரத்னம் புதிய படம், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் விக்ரமுடன் துருவ நட்சத்திரம் என்று பெரிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

       மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தில் அவரது கதாபாத்திரத்தைப் பற்றிக் கேட்ட போது, ‘எனக்கு மணி சார் படத்துல ஹீரோயினா நடிக்கணும் ரொம்ப ஆசை. அவரோட படங்கள்ல கதாநாயகி சும்மா வந்துட்டு போக மாட்டாங்க. ஹீரோயினுக்கு அழுத்தமான ரோல் தருவார். நான் வாலண்டியரா போய் அவரை மீட் பண்ணி சான்ஸ் கேட்டிருக்கேன்.சமயம் வரும் போது நிச்சயம் கால் பண்றேன்னு சொன்னார்.மணி சார் ஒரு நாள் பண்ணி புதுபடம் பத்தி சொல்லி பண்றீங்களான்னு கேட்டப்ப உடனே நான் பண்றேன் சார்னு சொன்னேன். இரும்மா கேரெக்டர் சொல்லறேன்னு அவர் சொன்னார்.
       

      இல்ல சார் அதெல்லாம் இருக்கட்டும் நான் கட்டாயம் பண்றேன்னு சொன்னேன். அவர் லெவலுக்கு என்கிட்ட எல்லாம் கதை சொல்லணும்னு அவசியம் இல்லை. ஆனால் அவர் பொறுமையா சொன்னார். ஜனவரி மாதம் ஷூட்டிங் தொடங்கும்.இந்தப் படத்துல நான் முக்கியமான ஒரு ரோல் பண்றேன் அது இப்போதைக்கு சீக்ரெட்’ என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.மேலும் இப்படத்தை பற்றிய மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.