துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி பகுதியில் அதிமுகவின் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் ஓ.பி.எஸ்-ஸின் மகன் ரவீந்தரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்காக அந்த தொகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தினருக்கு ரூ.1500 மற்ற சமூகத்தினருக்கு ரூ.1000 பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக நேற்று சமூக வலைத்தளங்களில் ஆதாரங்களுடன் செய்தி வெளியானது.

இந்நிலையில், போடி பகுதியில் உள்ள சொக்கநாதபுரத்தில் அதிமுக முன்னாள் சேர்மன் சவீதா அருண்குமார் ஒரு ஓட்டுக்கு ரூ.2000 கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.