வரும் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஒரே நேரத்தில் ஆறு பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதல் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த தீபாவளி அன்றே சர்கார், பில்லா பாண்டி, உள்பட 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியது. ஆனால் கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆறு படங்கள் ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்கமறு, தனுஷின் மாரி 2, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவின் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் மற்றும் அதர்வாவின் பூமராங் ஆகிய ஆறு படங்கள் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் இவற்றில் ஓரிரண்டு படங்கள் பின்வாங்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது