ஏற்கனவே ஒருசில படங்களுக்கு இரண்டு இசையமைப்பாளர்கள் பணிபுரிந்திருக்கும் நிலையில் தற்போது இரண்டு இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். அவர்கள் யுவன்ஷங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது

யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து இசையமைத்து வரும் படம் ‘பேய்ப்பசி. யுவனின் உறவினர் ஹரிபாஸ்கர் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தில் தற்போது யுவனுடன் இணைந்து இசையமைக்க சந்தோஷ் நாராயணன் சம்மதித்துள்ளார். இருவரும் இணைந்து இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வது மட்டுமின்றி பின்னணியும் அமைக்கவுள்ளனர்.

இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை விஜய்சேதுபதி பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து, விஜய்சேதுபதியை பாடகராக்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

த்ரில் படமாக உருவாகி வரும் இந்த படத்தில் நமிதா மற்றும் அம்ரிதா ஐயர் ஆகியோர்களும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநாயகம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார்