Connect with us

உலக செய்திகள்

ஒலிம்பிக்கில் விளையாட 55 இந்தியர்கள் தகுதி!

Published

on

அடுத்த வருடம் டோக்யோவில் நடைப்பெற இருக்கும் ஒலிம்பிக்கில் போட்டிகளில் விளையாட இந்தியாவைச் சேர்ந்த 55 பேர் இதுவரை தகுதி பெற்றுள்ளனர். அடுத்தாண்டு நடைபெறும் டோக்யோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை வசப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. டோக்யோ ஒலிம்பிக்கில் விளையாட ஆடவர் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியில் இடம் பெறுபவர்கள் உள்பட 55 இந்தியர்கள் இதுவரை முன்னேறியுள்ளனர்.
இந்தியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணி வெற்றி பெற்றதன் மூலம் அவை ஒலிம்பிக்கிற்கு தகுதிப் பெற்றன.
வில்வித்தை போட்டியில், இந்தியஆண்கள் அணி டோக்யோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த வினேஷ் போகாட், பஜ்ராங் புனியா, ரவிக்குமார் தகியா ஆகியோர் டோக்டோ ஒலிம்பிக்கிற்கு செல்கின்றனர். உலகச் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் இளம் வீரர் தீபக் பூனியா ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளார்.


ஆசிய சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், டோக்யோ ஒலிம்பிக்கில், 20 கிலோமீட்டர் ஓட்டப்பந்தய‌ பிரிவில் கோலோதுன் தோடி இர்ஃபான் விளையாடவுள்ளார். 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்திய அணி வியத்தகு ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளது. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் கலப்பு தொடரோட்ட அணிக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. அதேப் போல, அவினாஷ் ஸப்லே, தான் ஒலிம்பிக்கில் களம் காணவுள்ளதை உறுதி செய்து உள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வேட்டையாடும் களமாக துப்பாக்கிச்சுடுதல் விளையாட்டு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 10மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்தியா 2 இடங்களை உறுதிசெய்துள்ளது. அஞ்சும், அபுர்வி சாண்டேலா ஆகியோர் உலக சாம்பியன்ஷிப்பில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த இடங்கள் கிடைத்துள்ளன. 10மீட்டர் ஏர் பிஸ்டல் ஆண்கள் பிரிவிலும், இரு இடங்களை இந்தியா பெற்றுள்ளது. இளம் வீரர் சவுரவ் சவுத்ரி மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் இதை சாத்தியமாக்கியதோடு மட்டுமல்லாமல் பதக்கம் வெல்லும் வீரர்களாகவும் ‌கணிக்கப்பட்டுள்ளனர். 10மீட்டர் ஏர் ரைபில் ஆண்கள் பிரிவில், த‌வ்யான்ஷ்‌சிங் பன்வார் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கிச்சுடுதல் உலகக்கோப்பையில் வெள்ளி வென்றதன் வாயிலாக அவருக்கு டோக்யோ செல்ல டிக்கெட் கிடைத்துள்ளது. 3 நிலைகள் கொண்ட 50மீட்டர் ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புட்டும், 25மீட்டர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் ராஹி சர்னோபாத்தும், 10மீட்டர் ஏர் பிஸ்டல் பெண்கள் பிரிவில் மனு பக்கரும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ‌யாஷாஸ்வினி தேஸ்வால், தீபக்குமார் ஆகியோரும் ஒலிம்பிக்கிற்காக இடங்களை உறுதி செய்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

darbar
செய்திகள்10 hours ago

தர்பார் திருவிழா – முருகதாஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

செய்திகள்11 hours ago

ஒரு வருஷம் ஆச்சு… ஒன்னும் நடக்கல.. சின்மயி வேதனை….

thalapathy64
செய்திகள்12 hours ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

fathima
செய்திகள்13 hours ago

சுடிதார் பேண்டின் கயிற்றினை கட்டத்தெரியாத என் மகள்.. கதறும் பாத்திமாவின் தாய்..

Hero
செய்திகள்13 hours ago

டார்கெட் செய்யப்படும் சிவகார்த்திகேயன் – ஹீரோ படத்தை வெளியிட தடை

ajith
செய்திகள்14 hours ago

நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய அஜித் – யாரை தெரியுமா?

செய்திகள்14 hours ago

இந்திய பவுலர்கள் அபாரம் – 150 ரன்னுக்கு சுருண்ட பங்களாதேஷ் !

உலக செய்திகள்15 hours ago

மனித தலை கொண்ட மீனா ? – இணையத்தைக் கலக்கும் வீடியோ !

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்4 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending