ஓட்டுப்போட பொதுமக்கள் வாக்கு எந்திரம் அருகே செல்லும் போது வேறு நபர் சென்று வாக்கை செலுத்தும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டை நிலையில், வட இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ஒரு பூத்தில் வாக்களிக்க மக்கள் வரிசையில் நிற்கிறார்கள். கையில் மை வைக்கப்பட்டு, வாக்காளர் வாக்கு எந்திரம் அருகே செல்லும் போது, அங்கு அமர்ந்திருக்கும் நபர் வேகமாக சென்று வாக்கை அவரே பதிவிடுகிறார். வாக்களிக்க வந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அங்கிருந்து செல்கின்றனர். அங்கு இருக்கும் அதிகாரிகளும் இதைக்கண்டும் காணாதது போல் அமர்ந்துள்ளனர். ஆனால், அந்த நபர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இதுதான் ஜனநாயக தேர்தலா? இதற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.