ஓவியா இருந்தால்தான் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வேன்: பிரபல நடிகர்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா இல்லாததது பலருக்கும் வருத்தமே. அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வரமாட்டாரா? என்று பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள சமயத்தில் ஓவியா இனிமேல் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது சந்தேகமே.

இந்நிலையில், கடந்த வாரம் ‘கதாநாயகன்’ படத்தின் புரேமோஷனுக்காக அப்படத்தில் நடித்த விஷ்ணு விஷால், கேத்ரீன் தெரசா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தனர். பிக்பாஸ் வீட்டுக்குள் தான் சென்று வந்த அனுபவத்தை தனது டுவிட்டர் பக்கத்திலும் கூறியிருந்தார் விஷ்ணு விஷால். இந்த டுவிட்டிற்கு நடிகர் விக்ரம் பிரபு தனது கருத்தையும் தெரிவித்திருந்தார்.

அவர் கூறும்போது, ‘கூல் ப்ரோ… ஆனால் மக்கள் தலைவி ஓவியா அங்கு இருந்தால் மட்டுமே நான் செல்வேன்’ என்று கிண்டலாக சொல்லியிருக்கிறார். ‘கதாநாயகன்’ படமும் விக்ரம் பிரபு நடித்த ‘நெருப்புடா’ படமும் ஒரே நாளில்தான் வெளியானது. அதை குறிப்பிட்டுத்தான் விக்ரம் பிரபு, விஷ்ணு விஷாலுக்கு ரிப்ளை செய்துள்ளார்.