நேற்று நடைபெற்ற டிக்கெட் டூ பைனாலே டாஸ்க்கிள் ஜனனி வெற்றி பெற்றதைத் தொடா்ந்து அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வியாழக்கிழமை டிக்கெட் டூ பைனாலே டாஸ்க்கின் கிண்ணத்தில் தண்ணீருடன் சுற்றி வரும் போட்டி தொடர்ச்சியாக வியாழக்கிழமையைத் தொடர்ந்து நேற்றும் நடைபெற்றது.

இந்த டாஸ்கின் முக்கிய விதி யாருடைய கிண்ணத்தில் தண்ணீர் குறைகிறதோ அவர்கள் எலிமினேட்டராகி வெளியேறுவார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸை நம்புனது நம்ம தப்புதான்- பொங்கிய பிரபல நடிகை

இதில் பாலாஜி, மும்தாஜ், யாஷிகா, ரித்விகா தோல்வியுற்றதைத் தொடா்ந்து. நேற்றைய போட்டியில் விஜயலட்சுமி, யாஷிகா, ஜனனி போட்டியில் தொடா்ந்தனர்.

3 பேரும் தங்கள் கிண்ணத்தில் உள்ள தண்ணீரை கீழே சிந்தாத அளவில் வளைவில் சுற்றி வந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த டாஸ்க்கில் விஜயலட்சுமி தோல்வியுற்று வெளியேறியதைத் தொடா்ந்து யாஷிகாவும், ஜனனியும் இறுதி வரை வெற்றி பெறும் முனைப்பில் கடுமையாக போராடினர்

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் ஒவியா! கொண்டாட்டத்தில் ஆர்மி

இதனிடையே, போட்டி முடிவுற்ற நிலையில் இருவரது கிண்ணத்திலும் ஒரே அளவில் தண்ணீர் இருந்தது. இதையடுத்து, பிக்பாஸ், ஆரவ்வை மட்டும் அழைத்து போட்டியின் தன்மையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தினார்.

அதன்படி, யாஷிகாவும், ஜனனியும் மீண்டும் போட்டியிட வேண்டும். இந்த டாஸ்க்கின் போது இருவரும் ஏதேனும் ஒரு கையில் மட்டும் தான் கிண்ணத்தை பிடித்திருக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார் வில்லன் ரியாஸ்கானின் மகன்

இதையடுத்து, நடைபெற்ற டிக்கெட் டூ பைனாலே டாஸ்கின் இறுதி நேரத்தில் ஜனனி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதாக அறிவிக்கப்பட்டார்.

இரவு சுமாா் 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணிவரையில் தொடா்ந்த போட்டி முடிந்தபின்பு, யாசிகாவும், ஜனனியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.