Connect with us

அரசியல்

கட்சிக்கொடி இல்லை.. பேனர்கள் இல்லை… எளிமையான அண்ணா பிறந்தநாள் விழா…

Published

on

பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம், சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழாவுக்காக அதிமுக கட்சிக்கொடிகள், பேனர்கள் எதுவும் வைக்கப்படவில்லை.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு அருகேயுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் விழாவில் கொடிகள், பேனர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த்தால் கொடிகள், பேனர்கள் வைக்க வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி எந்த வித கொடி, பேனர் இல்லாமல் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தமிழக மக்களால் அறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் தமிழக முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாவின் 111வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்படுகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர் திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருடன் சென்று அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திமுக எம்.பி கனிமொழி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் திருவண்ணாமலையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர். தமிழகம் முழுவதும் பல கிராமங்களில் திமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

darbar
செய்திகள்39 mins ago

தீபாவளி வந்தாச்சு! தர்பார் வெடி வாங்கீட்டீங்களா? – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்2 hours ago

இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த ஆண்ட்ரியா: நீங்களே பாருங்க…

சினிமா செய்திகள்5 hours ago

எப்படி இருந்த நஸ்ரியா இப்ப இப்படி ஆயிடாங்களே…

செய்திகள்6 hours ago

ரோஹித் ஷர்மா & ரஹானே நான்காவது விக்கெட் பாட்னர்ஷிப் புதிய சாதனை

செய்திகள்7 hours ago

இப்படியா சொன்னார் லலிதா ஜூவல்லர்ஸ் உரிமையாளர்?- பரவும் தகவல்

உலக செய்திகள்7 hours ago

சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதித்த அரசு..!!

செய்திகள்8 hours ago

சிக்ஸர் மூலம் டெஸ்ட் அரங்கில் உலக சாதனை படைத்த ஹெட் மேன் ரோஹித்

ஜோதிடம்10 hours ago

இன்றைய ராசிபலன்கள் 20.10.2019

nayanthara
செய்திகள்4 days ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்3 days ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்2 days ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

valimai
செய்திகள்1 day ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்21 hours ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

செய்திகள்3 days ago

முத்தம் கொடுக்கும் போது சிக்கிக் கொண்ட நாக்குகள் – கத்தியை எடுத்து கணவன் செய்த கொடூரம் !

சின்னத்திரை1 day ago

பிரபல பாடகிக்கு திடீரென முத்தம் கொடுத்த போட்டியாளர்; அதிர்ச்சி அடைந்த நடுவர்கள்

bank
செய்திகள்3 weeks ago

பொதுமக்கள் கவனத்திற்கு – இனிமேல் வங்கிகள் இயங்கும் நேரம் இதுதான்

Trending