செய்திகள்
கமலுக்கு அல்வா கொடுத்த விஜய்,அஜித்

தமிழ் சினிமா அடையாளங்களில் கமல்ஹாசனும் ஒருவர். அவர் திரைத்துறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனைதையொட்டி கமல் 60 என்ற பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இளையராஜா கச்சேரியும் நடந்தது. அந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினி, விஜய், அஜித், விஜயசேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்தார். இதனால் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்த நிலையில் விழாவில் விஜய், அஜித் கலந்துகொள்ளவில்லை. விஜய் படப்பிடிப்பிற்காக மும்பையில் இருப்பதால் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர் கலந்துகொண்டு பேசினார். பொதுவாக எந்த விழாவிலும் கலந்துகொள்வதை தவிர்ப்பவர் அஜித். ஆனால் கமல் போன்ற மூத்த நடிகருக்கு நடக்கும் விழாவைக் கூடவா புறக்கணிப்பார் அஜித் என்று ரசிகர்கள் முணுமுணுத்தது கேட்க முடிந்தது.
-
செய்திகள்7 days ago
16 வயதினிலே படத்துக்கு ரஜினி வாங்கிய சம்பளம் – ரகசியம் உடைத்த பாரதிராஜா
-
செய்திகள்5 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
உலக செய்திகள்17 hours ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்4 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…