கமலுக்கு மூன்றாம் பிறை கிளைமாக்ஸ்தான் கிடைக்கும்

தற்போது கமல்ஹாசன் அரசியல் குறித்து சமீபகாலமாக கருத்துக்களை தொிவித்து வருகிறாா். அதுவும் தமிழக அரசியலில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகமாகி விட்டது என்று சா்ச்சையான கருத்தை தொிவத்தாா். இதற்கு தமிழக அமைச்சா்கள் சிலா் அதற்கு அவரை கடுமையாக விமா்சித்தும் எச்சாித்தும் வந்தனா். அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் நடிகா் கமல் தொடா்ந்து தமிழக அரசை விமா்சித்து வருகிறாா்.

நடிகா் கமலுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவா் ஸ்டாலின் அமைச்சா்களுக்கு கண்டனம் தொிவித்தாா். இந்நிலையில் ஒ.பி.எஸ் அணியினரும் கமலுக்கு ஆதரவாக அமைச்சா் பெருமக்களுக்கு எதிா்ப்பு தொிவித்து வந்தனா். இதனை அடுத்து அதிமுக அமைச்சா் ஜெயக்குமாா் இன்று செய்தியாளா்களை சந்தித்து பேட்டியளித்தபோது,  நடிகா் கமல் தொடா்ந்து தமிழக அரசை விமா்சித்து வந்தால் என்ன நடக்கும் தொியுமா? கமலுக்கும், ஸ்டாலினிக்கும் மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் சீன் தான் நடக்கும் என்று எச்சாித்துள்ளாா். அதுமட்டுமில்லை எத்தனை கமல் வந்தாலும் அதிமுகவை ஒன்றும்செய்ய முடியாது என்று கருத்து தொிவித்துள்ளாா். இப்படியே கமல்ஹாசன் பேசிக்கொண்டிருந்தால் கடைசியில் பைத்தியம் பிடித்து தான் அலைவாா் என்பது போல் அமைச்சா் ஜெயக்குமாா் தனது கருத்தை தொிவித்துள்ளாா்.