நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் ஆனந்தவிகடன் பத்திரிகையில் எழுதிய தொடரில் இந்து தீவிரவாதம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு இந்து அமைப்புகளும், பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ ஒன்றும், அதனையொட்டி அவர் பதிவு செய்த டுவிட்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கமல் போஸ்டரை கத்தியால் குத்தும் காட்சியும், பின்னணியில் இவன் இந்து விரோதி அவனை விடாதே’ என்ற குரலும் உள்ளது. இதுகுறித்து கமல் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்.<

இந்த டுவீட் புரியவில்லையா? கவலை வேண்டாம், இதோ அதன் விளக்கவுரை: அங்கு வளர்ந்த மீனவ சகோதரர்கள் தமிழ் பேசியதற்காக சாகிறார்கள்..ஒரு குழந்தை குத்தி நான் சாவது மேல்தான்..ஒரு நாள் இயற்கையாக நான் சாகத்தான் போகிறேன்..அதற்குமுன் இந்த வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்வேன்..முடிந்தால் கொன்று பார்..நான் வென்றே தீர்வேன்’ என்பதுதான் அதன் பொருள்