கஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பார்வையிட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் புறப்பட்டார்.

 

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. மக்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பலர் உணவின்றி, தண்ணீரின்றி தவித்து வருகின்றனர். தமிழகமெங்குமிலிருந்து டெல்டா மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  'மெர்சல் ஒரிஜினல் நாயகனும் ஜெராக்ஸ் காப்பிகளும்

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரடியாக பார்வையிட நடிகரும்,மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் ஆன கமல்ஹாசன் இன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.

நேற்று தன் கட்சி உறுப்பினர்களை அழைத்து ஏராளமான நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.பிறகு இன்று திருச்சியில் இருந்து தஞ்சை செல்லும் கமல் அங்கு நடக்கும் நிவாரண பணிகளை பார்வையிட்டு பின் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களை பார்வையிட போகிறார்.