தமிழில் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட்  காமெடி ஹாரர் படமான இதில், கெளதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியான போது மிக மோசமான விமர்சனங்கள் எழுந்தன விமர்சனங்கள் எழுந்தன. பணம் ஒன்றே குறிக்கோள் என்ற நோக்கில் மிகக் கீழ்த்தரமாக படங்களை எடுப்பதாக பிரபல இயக்குனர்கள் கண்டித்தனர் படங்களை எடுப்பதாக இயக்குனர்கள் கண்டித்தனர். இந்தப் படத்தை எதிர்த்து பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். படத்துக்கு எழுந்த எதிர்ப்பு விளம்பரமாக மாறியதால் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் தெலுங்கிலும் இப்படத்தை ரீமேக் செய்ய படக்குழுவினர் முடிவு செய்தனர். தெலுங்கு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பரில் வெளியானது.

இந்தநிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘சீகடி கடிலோ சித்தா கொட்டுடு’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை தமிழில் இயக்கிய சந்தோஷ் பி ஜெயக்குமார் ரீமேக் செய்துள்ளார். ஆதித் அருண் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நிக்கி தம்போலி, பொசானி முரளி கிருஷ்ணா, ரகுபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  • தமிழை விட தெலுங்கில் மிக மிக படு கவர்ச்சியாகவும் இரட்டை அர்த்தங்கள் வசனங்கள் மிகுந்ததாகவும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.