காதலர் தினத்தில் சாய்பல்லவியின் முதல் படம்

பிரேமம் படம் மூலம் கேரள ரசிகர்களை மட்டுமின்றி தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகை சாய்பல்லவி.

இவர் தற்போது இயக்குனர் விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளிவரவுள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சாய்பல்லவி, நாகசெளரியா, ஆர்ஜே பாலாஜி, சந்தானபாரதி, ரேகா, நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.