முக்கிய செய்திகள்
காரில் அயர்ந்து தூங்கிய தாய்.. தவறி சாலையில் விழுந்த குழந்தை… பதறிய பெற்ற தாய்..!

காரில் அயர்ந்து தூங்கிய தாய்.. தவறி சாலையில் விழுந்த குழந்தை… பதறிய பெற்ற தாய்..!
இடுக்கி மாவட்டம் கம்பிளிக்கண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஜீப்பில் தாய் அமர்ந்து இருந்திருக்கிறார். பயணக் களைப்பில் அவர் தூங்கியபோது, குழந்தை அவர் மடியிலிருந்து தவறி விழுந்திருக்கிறது.
அப்புறம், ஒன்றரை வயது குழந்தை ஒன்று, தனியாக சாலையில் தவழ்ந்து செல்வதாக கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை போலீஸாருக்கு தகவல் வந்தது. காட்டுப்பகுதியை ஒட்டிய சாலையில், இரவு 9 மணிக்குமேல் குழந்தை தனியாக இருப்பதாக வனத்துறையினர் மூலம் கிடைத்த தகவலால், பணியில் இருந்த எஸ்ஐ சந்தோஷ் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், அந்தக் குழந்தையை மீட்டனர். வனத்துறை செக் போஸ்ட் அருகே இந்தச் சம்பவம் நடந்ததால், அந்தக் குழந்தையை வனத்துறையினர் மீட்டனர்.
அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தபோது, அந்த வழியாக வேகமாகச் சென்ற கார் ஒன்றில் இருந்து குழந்தை தவறி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்து விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்திருந்தது. இதுகுறித்து செய்தியாள்ர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் சந்தோஷ், “குழந்தை குறித்த தகவல் எனக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தோம். குழந்தையை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்தோம். ஒன்றரை வயதான அந்தப் பெண் குழந்தை காரில் இருந்து தவறி விழுந்ததால், தலையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்குப் பின், குழந்தை குறித்த தகவல் சுற்றியிருந்த காவல் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு காவல்நிலையத்தில் குழந்தை குறித்து புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தக் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு பெற்றோரைக் கண்டுபிடித்தோம். விசாரணைக்குப் பின்னர், மறுநாள் காலையில் குழந்தையைப் பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைத்தோம்” என்றார்.
போலீஸார் விசாரணையில், இடுக்கி மாவட்டம் கம்பிளிக்கண்டம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், பழனி கோயிலுக்குச் சென்றுவிட்டு காரில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு ஜீப்பில் தாய் அமர்ந்து இருந்திருக்கிறார். பயணக் களைப்பில் அவர் தூங்கியபோது, குழந்தை அவர் மடியிலிருந்து தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்தபின்னர், ஏறக்குறைய 50 கி.மீ பயணம் செய்தபிறகே குழந்தை இல்லாதது அந்தக் குடும்பத்தினருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, குழந்தையைக் காணவில்லை என வெள்ளத்தூவல் காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். நடந்ததைக் கேட்டறிந்த போலீஸார், குழந்தையைப் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
#WATCH Kerala: A one-year-old child falls out of a moving car in Munnar region of Idukki district. The girl child was later rescued and handed over to the parents. (08.09.2019) pic.twitter.com/tlI7DtsgxU
— ANI (@ANI) September 9, 2019
-
செய்திகள்4 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்2 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்5 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…