கல்யாணம், குழந்தைகள் என குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்த நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் கொடுத்தார் . அதைத்தொடர்ந்து இவர் நடித்த ‘மகளிர் மட்டும்’, ‘நாச்சியார்’ படங்கள் அனைத்தும் மகத்தான வெற்றி தான்.

இதையடுத்து, இவர் நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது. ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘துமாரி சுலு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் காற்றின் மொழி படம். இதில் நடிகர் வித்தார்த் ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார். மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் ஆயுதபுஜையை முன்னிட்டு அக்டோபர் 18ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.

இதற்கிடையில், படத்தின் டைட்டிலை கணிக்ககூறி முன்னதாகவே ஒரு போட்டி நடத்தப்பட்டது. இந்நிலையில் படக்குழுவினரின் சார்பாக பாடல் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கவிதை எழுதுபவர்கள், திரைப்பாடல் எழுதுபவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டி, செப்டம்பர் 24ஆம் தேதி இதற்கான கடைசி தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் அனுப்பவேண்டிய முகவரியும் இணைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பப்படும் பாடல்களிலிருந்து இரண்டு சிறந்த பாடல்களை படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். இவர்களுக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது வெகுமானமும், அங்கீகாரமும் தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், திரையுலகில் மக்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த இந்த நல்ல வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.